Tuesday, 17 December 2013

Vinayaka Shanthi

விநாயக சாந்திக்கு பூர்வாங்கமாக இதை அநுஷ்டிக்க வேண்டும்

பொது

பரிஹாரம் - இதைத் தடைநீக்கல் என்றும் சொல்லலாம். சாந்தி என்றும் சொல்லாம். முன்செய்த வினைப்பயனாக நம் வாழ்க்கையில் சில பல கஷ்டங்கள் நேர்கின்றன. வினைக்குத் தக்க ஜாதகம் அமைகிறது. வினையின் அனுபவம் என்பது புண்யம் பாபம் இரண்டையும் சேரும். ஒருவருக்கு சாபங்கள் பாபஙக்ள் இரண்டும் நேரும். சாபம் என்பது பெரியோரால் கொடுக்கப்படுவது. அதை அனுபவித்தே தீரவேண்டும். வினைகளின் விளைவான பாபம் என்பதின் விளைவுகளை சமாளிக்க பரிஹாரங்கள் மூலம் நீக்கலாம் அல்லது குறைக்கலாம்.

பரிஹாரங்கள் செய்ய முன்னோர்கள் பல ப்ரயோகங்களை - அதாவது ஜபம், ஹோமம் மூலம் விளக்கியுள்ளார்கள்,
ஒரு உபாத்யாயர் / ப்ருஹஸ்பதியை நியமித்து மற்றும் ரித்விக்களை நியமித்து (ஜபம் ஹோமம் ஆகியவற்றில் வல்லவர்கள்) 4 அல்லது 6 அல்லது 8 நபர்களை விதிப்படி வரிக்கவும்.

சில பொது விதிகள்
கர்மாக்கள் ஆரம்பிக்கும் போது புதிதாக பூணல் தரிக்க வேண்டும். பெரியோர்களான வேதவித்வான்களை வணங்கி தக்ஷிணை (பணம்) கொடுத்து அனுமதி பெற வேண்டும். இதுவே அநுஜ்ஞா எனப்படும். அவர்கள் ஆசீர்வாதம் செய்வார்கள்.

மந்த்ரங்கள் (*)
  1. த்ருவம் தே ராஜா
  2. தேவீம் வாசம் - என்ற மந்த்ரத்தால்

  1. விக்ந ராஜனை (கணபதியை) அவர் நாமாக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
  2. ததேவ லக்னம் என்று ஸபையோருக்கு தக்ஷிணை தாம்பூலம் தருவது
  3. நமஸ் ஸதஸே என்று ஸதஸ் வந்தனம்
  4. கணாநாம் மந்த்ரத்தால் - கணபதி பூஜை

(இதில் (*) குறியீடு உள்ள மந்திரங்களை வேதம் படித்தவர் ஸ்வரம் தவறாமல் கூறுவர்)
பிறகு எதற்காக யார் செய்கிறோம் என்கிற ஸங்கல்பம். கோத்ரம் / பெயர் / ராசிகளை சொல்லி ஆரம்பிக்க வேண்டும். ஸங்கல்பத்தில் வருஷ, அயன, மாஸ, திதி, வார, நக்ஷத்ரங்களைக் கூறிய பிறகு கணபதி உத்வாஸநம்.
(இங்கு வைஷ்ணவர்கள் விஷ்வக்ஸேனரை ஆராதித்து பூஜிப்பர்)
ஸங்கல்பம் முடிந்தவுடன் கணபதி உத்வாஸநம் செய்யவும். விக்நேசருக்கு அணிவித்த மாலைகளை பிரஸாதமாக தம்பதிகள் அணிய வேண்டியது.
கர்ம விக்னங்களைப் போக்கவே கர்மாவுக்கு அங்கமாக முதலில் விநாயக சாந்தி செய்ய வேண்டும் என்கிறார் யாஜ்ஞவல்க்ய மஹரிஷி. நமக்கு நேர இருக்கும் சுப அசுப விளைவுகளை சில ஸ்வப்னங்கள் மூலமும் தெரியப்படலாம். இதற்கு ஸ்வப்ன சாஸ்த்ரம் சொல்லும் விளக்கமாவது

ஸ்வப்னத்தில் சில அடையாளங்கள்
ஜலத்தில் மூழ்கியவனாய் முண்டங்களையும் காஷாய வஸ்த்ரம் தரித்தும் மாம்ஸம் சாப்பிட்டுக் கொண்டும் கழுதை ஒட்டகம் ஏறுதல், எண்ணெய் தேய்த்த உடம்புடன் இருத்தல் இது மாதிரி கனவு கண்டால் சுப பலன்கள் நேராது. இடர் வரப் போகிறது என அடையாளம்.

இதற்கு துஸ்ஸ்வப்ந பரிஹாரம் செய்தால் இடர் நீங்கும். ஹஸ்தம் புஷ்யம் அச்வினி ரோகிணி திருவோணம் போன்ற நக்ஷத்ரங்கள் சிறந்தது. சுபமான புண்ய தினம், சுக்லபக்ஷம் உயர்ந்தது. விநாயக சாந்திக்கு சதுர்த்தி விசேஷம்.
யஜமானன், தம்பதியாக ஸர்வ ஓஷதி, ஸர்வ கந்தங்களை சிரசிலும் உடலிலும் பூசிக் கொள்ள வேண்டியது.

தீர்த்த கலசத்தில் சேர்க்க வேண்டிய ஸர்வ ஓஷதிகள்
மஞ்சள், கடுகு, நெய், கஸ்தூரி மஞ்சள், வசம்பு, செண்பகப்பூ, கோரைக் கிழங்கு, சந்தனம், கற்பூரம், குங்குமம், அகில், ஜாதி, கோரோசனம், குங்குலியம் இவைகளைக் கிடைத்த மட்டில் சேர்க்கவும்.
இவைகளை தீர்த்தத்தில் சேர்க்க நல்லது. பிறகு ஆவாஹனம், ஜபம், ஹோமம், ஸ்நாநம் முதலியவை.

ஸ்நாந பீடத்தில் அமரவைத்து ஸ்நாநம்

சில பொது விதிகள்

4 பக்கங்களில் 4 கலசங்கள் இவைகளில் வருண ஆவாஹநம்
வடகிழக்கில் சிகப்பு வஸ்த்ர ப்ரதிமையில் கணேசன், அம்பிகை ஆவாஹநம்
கணேச துர்கா காயத்ரி மந்த்ரத்தையும்
வ்யோமகேது என்ற சிவ தேவதையையும்
அங்காகரன், சுக்ரன், குரு, புதன், சனி, சந்திரன், ஸ்கந்தன், விஷ்ணு

பின்வரும் ச்லோகத்தால் கலச தீர்த்தத்தால் யஜமானனை அபிஷேகம் செய்விக்கலாம்.

ஸ்நானம் செய்விக்க மந்த்ரங்கள்
ஸஹஸ்ராக்ஷம் சததாரம் ருஷிபி: பாவநம் க்ருதம்
தேந த்வாம் அபிஷிஞ்சாமி பாவமாந்ய: புநந்து தே
பகம் தே வருணோ ராஜா பகம் ஸூர்யோ ப்ருஹஸ்பதி:
பகமிந்த்ரச்ச வாயுச்ச ஸப்தர்ஷயோ விது:
யத்தே கேசேஷு தேளர்பாக்யம் ஸீமந்தே யச்ச மூர்த்தநி
லலாடே கர்ணயோரக்ஷ்ணோ: ஆபஸ்தத்க்நந்து ஸர்வதா

அத்தி கரண்டியால் (spoon) கடுகு தைலத்தை சிரஸில் விடுவது
இடது கையில் தர்ப்பம் பிடித்து ஸ்வாஹாகாரத்துடன் சிரஸில் விட வேண்டும்.

இதற்கு மந்த்ரம்

மிதச்ச ஸ்வாஹா
ஸம்மிதச்ச ஸ்வாஹா
சாலாய ஸ்வாஹா
கடங்கடாய ஸ்வாஹா
கூச்மாண்டாய ஸ்வாஹா
ராஜபுத்ராய ஸ்வாஹா

ஹோமம்

இதையே அக்நியிலும் ஹோமம்
இந்திராதி அஷ்டதிக் பாலர்களுக்கு நாற்சந்தியில் முறத்தில் வைத்து பலி

பலி சாமான்கள்
அரிசி, பக்ஷணங்கள், மோதகங்கள், வாழைப்பழங்கள், தீபம், வெல்லமாவு, தயிர் சாதம், பாயஸம், லட்டு

முதலில் கணபதி, துர்க்கை இவர்களை உத்வாஸநம் செய்யவும்.
அருகம்புல், கடுகு, புஷ்பங்களால் அர்க்யம் தருவது

ப்ரார்த்தனை
ரூபம் தேஹியசோதேஹி அபயம் தேஹி மே அம்விகே
புத்ரான் தேஹி தநம் தேஹி ஸர்வான் காமாம்ச தேஹி மே

பிறகு புது வஸ்த்ரம் உடுத்தி மாலைகள் தரித்து ப்ராஹ்மணருக்கு போஜநம், வஸ்த்ர தானம் அளிக்க வேண்டியது.

யஜமானனுடைய அபிஷேகம் செய்த வஸ்த்ரத்தை ஆசார்யருக்கு தரவும்.
கர்ம பலன்கள், லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.

•••

ஸ்ரீ கமலகரபட்டா சாந்திரத்நாகரத்தில்
விநாயக சாந்தி ப்ரயோக விதி

இது மாதாமாதம் சுக்லபக்ஷ சதுர்த்தியில் செய்ய வேண்டும். பஞ்சமியிலும் செய்யலாம். சுத்தி விரும்புவோர், ஸம்ருத்தி விரும்புவோர், பசுவ்ருத்தி விரும்புவோர் முதலில் விநாயகருக்கு பலி சமர்ப்பிக்கவும். முதல் நாள் ஒரு போது மட்டுமே உண்ண வேண்டும். ஆசனநம் செய்து அக்நி ப்ரதிஷ்டை செய்து கொள்ளவும். முகாந்தம் செய்த பிறகு (இது ப்ருஹஸ்பதிகளுக்கு தெரியும்) தெற்கு நோக்கிய கணபதியை ஆவாஹனம் செய்யவும்.

விக்நேச! ஆகச்ச விக்நாந்தே வாரயேத க்ருதாநதி:||
அவிக்நாய பவாஸ்மாகம் த்வதந்ய: சரணம் ந மே||”

பவோத்பவாய நம:” என்று அருகம்புல் அக்ஷதை புஷ்பம் கலந்த ஜலத்தால் அர்க்யம் தரவும்.

ஆப: சிவதமா: பூதா: பூததமா: மேத்யா:
மேத்யதமா: அம்ருதா அம்ருததமா: அம்ருத ஏஸா
ஆத்யா அர்க்யா: அர்ஜணியா: அபிஷேசநீயா:
ஆசமநியா: - ப்ரதிக்ருஹ்யதாம்

விநாயகர் அம்பிகை இவர்களுக்கு கந்த புஷ்ப தூப, தீபங்களால் அர்ச்சிக்கவும்.

பிரதான ஹோமம்

நமோ புவநவதயே நமோ பூதாநாம் பதயே
என்று கூறி விநாயகருக்கு பின்வருமாறு 3 முறை ஆஹுதிகள்

மந்த்ரம்
விநாயகாய பூதபதயே நமோ விநாயகாய ஸ்வாஹா

பிறகு ஜயாதி முதல் ப்ரஹ்ம உத்வாஸநம் ஆகியவை ஹோமம் முடிய வழக்கப்படி செய்யவும். (இது ஆசார்ய ப்ருஹஸ்பதிகளுக்கு தெரியும்)

அப்பம், க்ருஸரம், மோதகம், மாவு, பாயஸம் இவைகளை இறைக்கவும்.

பிறகு ஹோமம். இதற்கு மந்த்ரம்

விநாயகாய, வீராய, சூராய, உக்ராய, பீமாய, ஹஸ்திமுகாய, வரதாய, விக்ந பார்ஷதேப்ய, ஸ்வாஹா

பலி
யே பூதா ப்ரசரந்தி
கங்கணம்
ஐந்து பிரிநூல் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்ள மந்திரம்

விநாயக மஹாபாஹோ| விக்நம் ஏதத் தவாஜ்ஞயா|
காமயே ஸாதிதா: ஸர்வே இதம் பத்நாமி கங்கணம்||

பிறகு அக்நியை ப்ரக்ஷிணம் செய்து நமஸ்கரித்து அபிவாதனம் செய்து விநாயகரை விஸர்ஜநம் செய்யவும்.

இதற்கு மந்திரம்
க்ருதம் யதிமயா ப்ராப்தம் மஹாபோகம் கணேச்வர|
உத்திஷ்ட ஸகணஸ்ஸாதோ! பாஹி பத்ர! ப்ரஸீத மே||

தயிர் தேன் பால் நெய் நிவேதநம் செய்யவும்விநாயக சாந்தி ப்ரயோகம்

அனுஜ்ஞா + ஸங்கல்பம்
.... விநாயக உபஸர்க்க சாந்த்யர்த்தம்
..... கர்மணி நிர்விக்நதா ஸித்யர்த்தம்
... பல ஸித்யர்த்தம் லக்ஷ்மீ ப்ராப்த்யர்த்தம்

விநாயக சாந்திம் கரிஷ்யே

அங்கமான கணேச பூஜை, புண்யாஹவாசெநம் நாந்தீ இவைகளைச் செய்யவும்.

ஆசார்யனை வரித்து 4 அல்லது 8 ரித்விக்களை வரிக்கவும். ஆசார்யர் தரையில் மாவில் மத்தியில் ஸ்வஸ்திகம் இடவும். அதன்மேல் பீடம் வஸ்த்ரம் சாற்றவும். 4 பக்கங்களிலும் ஸ்வஸ்திகா போடவும். கிழக்கு முதல் நான்கு திக்கிலும் தரையில் தான்யத்தில் நான்கு கும்பங்கள்.

மந்த்ரம் : மஹீத்யௌ:...

நதி ஜலத்தால் கலசங்களை நிரப்பவும். அவைகளில் மண் சேர்த்தல், இதற்கு வேத மந்த்ரங்கள்

உத்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந சத்பாஹுநா
ம்ருத்திகே ஹந மே பாபம் யந்மயா துஷ்க்ருதம் க்ருதம்

கும்ப ஜலத்தில் வாஸநாத்ரவ்யம் சேர்த்தல்

கந்த த்வாராம் ..... என்று சந்தனம் அகில் கஸ்தூரி கற்பூராதி வாஸநா கோரோசனம் குங்குலியம் சேர்க்கவும்.

மாவிலை சேர்க்கவும்

அச்வத்தே வோ நிஷதனம்...
என்ற வேத மந்த்ரத்தால் பல்லவங்களை (இலைத் துளிர் கோத்து) கலசத்தில் சேர்க்கவும். (அரச, உதும்புரம். மா, காட்டு ஆல், அத்திக் கொத்துக்கள்)
யா: பலிநீ:’ என்று சந்தனம் மாலை அணிவிக்க

ஸ ஹி ரத்நாநி .. என்ற பஞ்சரத்னங்கள் (பொன், வெள்ளி, முத்து, பவளம் போன்றவை) சேர்க்கவும்.

யுவா ஸுவாஸா ...... என்று வஸ்த்ரம்

பூர்ணா தர்வி ....என்று பூர்ண பாத்ரம்

4 கலசங்களிலும் ஆவாஹனங்கள்
த்வந்நோ அக்நே.... வருண ஆவாஹநம்
16 உபசாரங்கள் ஸமர்ப்பிக்கவும்.


ஜபங்கள்

காயத்ரீ, வேதாரம்பம் கணாநாம் த்வா 100 முறை
கௌரீமிமாய க்ருணுஷ்வபாஜ: ஸ்வஸ்தி ந இந்த்ர
அப்ரதிரத ஸூக்தம், ருத்ரம், சமகம், புருஷஸூக்தம்,
ஸ்ரீ ஸூக்தம், ம்ருத்யு ஸூக்தம், பஞ்ச சாந்தி,

ஆநோ பத்ரா, ஆபோஹிஷ்டா, ஹிரண்ய
வர்ணா: பவமாந: சந்நோ வாத: பவதாம்
மற்றும் சாந்தி மந்த்ரங்கள்

பிறகு ஹோம குண்டத்தில் அக்நிகார்யம்

ஹோம வேதிக்கு சனிமூலையில்
  1. விநாயகர் 2. அம்பிகை ப்ரதிமைகள் வைத்து பூஜிக்கவும்.

ஆவாஹந மந்த்ரங்கள்

  1. விநாயகர்
தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரசோதயாத்

  1. அம்பிகை
ஸுபகாயை ச வித்மஹே காமமாலிந்யை ச தீமஹி
தந்நோ கௌரீ ப்ரசோதயாத்

சுற்றிலும் ருத்ரன், பார்வதி, கணபதி, விஷ்ணு ஸூர்யன் முதலான க்ரஹங்களோடு ஸ்கந்தன், வாஸுதேவன், இந்த்ராதி லோக்பாலர்கள் இவர்களின் ஆவாஹனம்.

பிறகு ஸமித், அந்ந ஆஜ்யங்களால் ஹோமம்.

மிதம், ஸம்மிதம், சாலங்கடம், கூச்மாண்டம், ராஜபுத்ரம் என்று இவர்களுக்கு அந்நஹோமம்

ஸ்விஷ்டக்ருத், ஹோம முடிவு

நான்கு ரித்விக்களும் யஜமானனை மங்கள பீடத்தில் அமர்த்தி ஸ்வஸ்திவாசநம் ஓத வேண்டியது
பிறகு குடும்பத்தோடு கும்பங்களுக்கு ஆரத்தி - குடும்பத்தினருக்கு யஜமானன் புது வஸ்த்ரம் தருதல்

ஆசார்யன் யஜமானனை அபிஷேகம் செய்வித்தல்

மந்த்ரங்கள்
1. ஸஹஸ்ராக்ஷம் (கிழக்கு கலசத்தால்)
2. பகம் தே ராஜா தெற்கு கலசத்தால்
3. ஸஹஸ்ராக்ஷரம் வடக்கு கலசத்தால்
4. எல்லா கலசங்களாலும்

ஏதத்வை பவமாநம் ஸ்நாநம் ஸஹஸ்ராக்ஷம் ருஷிஸ்ம்ருதம்
தேந த்வா சத தாரேண பாவமாந்ய: புநந்து மா
சக்ராதி தச திக்பாலா: ப்ரஹ்மேசா: கேசவாதய:
ஆபஸ்தே க்நந்து தௌர்பாக்யம் சாந்திம் ததது ஸர்வதா

5. ஸுமித்ரா ந த்விஷ்ம: என்ற வேத மந்த்ரம்

6. ஸமுத்ரோ கிரயோ நத்யோ முநயச்ச பதிவ்ரதா:
தௌர்பாக்யம் க்நந்து தே ஸர்வே சாந்திம் யச்சது ஸர்வதா
பாத குல்போரு ஜங்காஸ்ய நிதம்போதர நாபிஷு
ஸ்தநோரு பாஹு ஹஸ்தாக்ர க்ரீவா அம்ஸாங்க ஸந்திஷு
நாஸா லலாடகர்ணப்ரூ கேசாந்தேஷு யத் ஸ்திதம்
ததபோக்நம்து தௌர்பாக்யம் சாந்திம் யச்சது ஸர்வதா

பிறகு ஆசார்யன் யஜமானனுக்கு பின்புறம் நின்று கொண்டு இடது கையால் தர்பங்களை யஜமானனின் தலையில் வைத்து அங்கு கடுகு, எண்ணைகளால் அத்தி கரண்டியால் - 6 ஆஹுதிகள்
அவை
1. ஓம் மிதாய ஸ்வாஹா
2. ஸம்மிதாய ஸ்வாஹா
3. சாலாய ஸ்வாஹா
4. கடங்கடாய ஸ்வாஹா
5. கூச்மாண்டாய ஸ்வாஹா
6. ராஜபுத்ராய ஸ்வாஹா

அதே ஆறு மந்த்ரங்களால் ஹோமம் உண்டு.

ஸ்விஷ்டக்ருத முதலிய ஹோமம் முடித்து ஹோம சேஷத்தால் கிழக்கு முதல் பத்து திக்குகளிலும் இந்த்ராதி தேவர்களுக்கு பலி. யஜமானனை பிறகு ஸ்நாநம் செய்து புது வஸ்த்ரம் அணிவித்து ஆசார்யனுடன் சேர்ந்து

விநாயகரையும் அம்பிகையையும முன்சொன்ன காயத்ரீ மந்த்ரங்களால் பூஜை செய்து 16 உபசாரங்கள் செய்து முன்சொன்ன அரிசி, எள், உப்பு, பாயஸம், வெல்லமாவு, லட்டு போன்ற உபஹாரங்களை முன்சொன்ன மந்த்ரத்தால்... நிவேதயாமி என்று நைவேத்யம் செய்யவும்.
புஷ்பங்களால் உதகாஞ்ஜலியை (கைகூப்புதல்) இருவருக்கும் செய்ய வேண்டியது. அதே மந்த்ரத்தால் அர்க்யம். சிரஸால் பூமியில் விழுந்து வணங்கி ப்ரார்த்தித்தல்

ரூபம் தேஹி..... தேஹிமே

மற்றும்

ஸெளபாக்யம் அம்பிகே தேஹி ரூபம் பாக்யம் யசோபி ச
ச்ரியம் புத்ராம்ச காமாம்ச ததா சௌர்யம் ச தேஹிமே
கணேசமாதரம் பாலே யத்கிஞ்ச மதபீப்ஸிதம்
ஏக நாம்நைவ தத் தேஹி கௌர்வி வராநநே

பிறகு அர்க்யதானம், உபஸ்தாநம், நாற்சந்தியில் பலி (முறத்தால் தர்ப்பம் பரப்பி பலி)
நாற்சந்திக்குச் சென்று பலி இடும் மந்த்ரம்

பலிம் க்ருஹ்ணந்து இமாம் தேவா ஆதித்யா வஸவஸ்ததா
மருதோதாச்விநௌ ருத்ரா: ஸுவர்ணா: பந்நகா க்ரஹா:
அஸுரா யாதுதாநாச்ச பிசாசோ மாதரோரகா:
காகிந்நயோ யக்ஷ வேதாளா யோகிந்ய: பூதநா: சிவா:
ஜ்ரும்பகா ஸித்த கந்தர்வா நாநாவித்யாதராந கா:
திக்பால லோகபாலாச்ச யே ச விக்ந விநாயகா:
ஜகதா சாந்தி கர்த்தாரோ ப்ரஹ்மாத்யாச்ச மஹர்ஷய:
மா விக்நம் மா மே பாபம் மா ஸந்து பரிபந்திந:
ஸெளம்யா பவந்து த்ருப்தாச்ச பூதப்ரேதாஸ்ஸுகாவாஹா:

பிறது யஜமானனை வீட்டிற்கு வந்து கை கால் அலம்பி ஆசமநம் செய்து பூர்ணாஹுதி ஹோமம் செய்யவும்.

ஆசார்யபூஜை, வேஷ்டிஜதை, ஸ்வர்ணம், தக்ஷிணை இவைகளை சமர்ப்பித்து வணங்கவும். ரித்விகளுக்கும் யதா சக்தி தக்ஷிணை கொடுக்கவும். மற்றவர்களுக்கும் தக்ஷிணை கொடுக்கவும்.

விநாயகர்-அம்பாள் இவர்களுக்கு உத்தராங்க பூஜை செய்து உத்ஸர்ஜநம் செய்து ஹோம விபூதி தரித்து ப்ராஹ்மண போஜனம் செய்வித்து, கர்மாவை ஈச்வரார்ப்பணம் செய்யவும்.

சுபம்